
பசியால் நிரம்பிய பட்டினியின் வயிறு
அரைஞாண்கயிறும் அவிழ்ந்திருக்கும் - ஐந்துமாத
குழந்தை என்ன பாவம் செய்திருக்கும்
அறுவடை சோற்றை உலகுக்கு இரைத்தவன்...
பதுங்கு குழிகளின் பக்குவம் பழகினான்...
அரைவயிறு இரைதேடி ஆயுளை கரைக்கிறான்...
அண்ணாந்து பார்க்கிறான், ஆகாயம் காண்கிறான்...
குண்டுகளின் விமான விருந்தில்
வக்கனயாய் விழுகிறது வாய்க்கரிசி...
அரைஞாண்கயிறும் அவிழ்ந்திருக்கும் - ஐந்துமாத
குழந்தை என்ன பாவம் செய்திருக்கும்
அறுவடை சோற்றை உலகுக்கு இரைத்தவன்...
பதுங்கு குழிகளின் பக்குவம் பழகினான்...
அரைவயிறு இரைதேடி ஆயுளை கரைக்கிறான்...
அண்ணாந்து பார்க்கிறான், ஆகாயம் காண்கிறான்...
குண்டுகளின் விமான விருந்தில்
வக்கனயாய் விழுகிறது வாய்க்கரிசி...