
Tuesday, October 20, 2009
Thursday, August 20, 2009
பச்சை வயிறுகள்....

இறுகி கிடக்கிறது
இடறி விழுந்த
காய தழும்புகள்...
கருகி கிடக்கிறது
கட்டுடைந்த
கனத்த நெஞ்சங்கள்...
பரவி கிடக்கிறது
பசியின் வாசனையில்
பச்சை வயிறுகள்...
மருவி கிடக்கிறது
மாமிச எச்சங்களாய்
மனித உரிமைகள்...
விரவி கிடக்கிறது
விளக்கின் திரியில்
வீர விறகுகள்...
இடறி விழுந்த
காய தழும்புகள்...
கருகி கிடக்கிறது
கட்டுடைந்த
கனத்த நெஞ்சங்கள்...
பரவி கிடக்கிறது
பசியின் வாசனையில்
பச்சை வயிறுகள்...
மருவி கிடக்கிறது
மாமிச எச்சங்களாய்
மனித உரிமைகள்...
விரவி கிடக்கிறது
விளக்கின் திரியில்
வீர விறகுகள்...
Wednesday, June 17, 2009
கையாளாகாத் தமிழன்...?!

ஹலோ?!....
சாப்ட்டியாப்பா?...
என்ன சாப்பிட்ட?..
அது என்னத்த ஆங்கும்..
முட்டை ஒன்னு வச்சிக்க கூடாது?...
கூட ஒரு அன்ன குத்தி வச்சுக்கத்தானே...
வெளியெல்லாம் சுத்தாத...
ஏதோ காய்ச்சல் பரவுதாமே...
நேரத்துக்கு தூங்கி நல்லா ரெஸ்ட் எடு...
பாத்து பாத்து செஞ்சிபோடுவேன் -
அங்க என்ன சாப்ட்டு எப்படி இருக்கியோ...
வெளியூரில் வேலை செய்யும்
என்னை - என் அம்மா விசாரிக்கும் போதெல்லாம்...
என் மனம் நினைத்து பார்க்கிறது...
கேட்க்க நாதியற்று கிடக்கும்
என் தாய் தமிழ் உறவுகளை...
என் செய்வேன்...
கையாளாகாத் தமிழன் - என்னால்
நினைக்க மட்டும் தான் முடிகிறது...
சாப்ட்டியாப்பா?...
என்ன சாப்பிட்ட?..
அது என்னத்த ஆங்கும்..
முட்டை ஒன்னு வச்சிக்க கூடாது?...
கூட ஒரு அன்ன குத்தி வச்சுக்கத்தானே...
வெளியெல்லாம் சுத்தாத...
ஏதோ காய்ச்சல் பரவுதாமே...
நேரத்துக்கு தூங்கி நல்லா ரெஸ்ட் எடு...
பாத்து பாத்து செஞ்சிபோடுவேன் -
அங்க என்ன சாப்ட்டு எப்படி இருக்கியோ...
வெளியூரில் வேலை செய்யும்
என்னை - என் அம்மா விசாரிக்கும் போதெல்லாம்...
என் மனம் நினைத்து பார்க்கிறது...
கேட்க்க நாதியற்று கிடக்கும்
என் தாய் தமிழ் உறவுகளை...
என் செய்வேன்...
கையாளாகாத் தமிழன் - என்னால்
நினைக்க மட்டும் தான் முடிகிறது...
Saturday, May 30, 2009
வாய்க்கரிசி...

பசியால் நிரம்பிய பட்டினியின் வயிறு
அரைஞாண்கயிறும் அவிழ்ந்திருக்கும் - ஐந்துமாத
குழந்தை என்ன பாவம் செய்திருக்கும்
அறுவடை சோற்றை உலகுக்கு இரைத்தவன்...
பதுங்கு குழிகளின் பக்குவம் பழகினான்...
அரைவயிறு இரைதேடி ஆயுளை கரைக்கிறான்...
அண்ணாந்து பார்க்கிறான், ஆகாயம் காண்கிறான்...
குண்டுகளின் விமான விருந்தில்
வக்கனயாய் விழுகிறது வாய்க்கரிசி...
அரைஞாண்கயிறும் அவிழ்ந்திருக்கும் - ஐந்துமாத
குழந்தை என்ன பாவம் செய்திருக்கும்
அறுவடை சோற்றை உலகுக்கு இரைத்தவன்...
பதுங்கு குழிகளின் பக்குவம் பழகினான்...
அரைவயிறு இரைதேடி ஆயுளை கரைக்கிறான்...
அண்ணாந்து பார்க்கிறான், ஆகாயம் காண்கிறான்...
குண்டுகளின் விமான விருந்தில்
வக்கனயாய் விழுகிறது வாய்க்கரிசி...
Friday, May 22, 2009
புரட்சிக்கான தீபம்....
இருண்ட வீட்டுக்கு வெளிச்சம்
தந்தீர்கள் - எங்கள்
கூரைகளை எரித்து...
மழையில் நனைந்தோம்...
குடைகள் தந்தீர்கள் - நாங்கள்
வெள்ளத்தில் மூழ்கியபோது...
உணவுகள் தந்தீர்
உப்பில்லாமல் - அதை
சமன் செய்தது எங்கள்
கண்ணீர் துளி...
வினாவின் விளக்கத்தில்
விடைகள் தெரிந்தது - ஆணால்
பரிட்சையின் நேரம் தான் முடிந்திருந்தது...
தேர்தல் முடிந்ததும்
கைகழுவும் இந்தியா...
தமிழர்கள் என்ன
சாப்பாட்டுப் பந்தியா...

துரோகங்கள் இழைக்க
சாபங்கள் தழைக்க
என் வயிறு
எரிகிறது - புரட்சிக்கான தீபம்....
தந்தீர்கள் - எங்கள்
கூரைகளை எரித்து...
மழையில் நனைந்தோம்...
குடைகள் தந்தீர்கள் - நாங்கள்
வெள்ளத்தில் மூழ்கியபோது...
உணவுகள் தந்தீர்

உப்பில்லாமல் - அதை
சமன் செய்தது எங்கள்
கண்ணீர் துளி...
வினாவின் விளக்கத்தில்
விடைகள் தெரிந்தது - ஆணால்
பரிட்சையின் நேரம் தான் முடிந்திருந்தது...
தேர்தல் முடிந்ததும்
கைகழுவும் இந்தியா...
தமிழர்கள் என்ன
சாப்பாட்டுப் பந்தியா...

துரோகங்கள் இழைக்க
சாபங்கள் தழைக்க
என் வயிறு
எரிகிறது - புரட்சிக்கான தீபம்....
Subscribe to:
Posts (Atom)