இரவின் நெடும்பயணத்தில்
விடியல் - ஒரு
தடை கல் தான்
******
இரவு முழித்துகொண்டிருக்க
பகல் நிசப்தமாக
உறங்கிகொண்டிருக்கிறது
******
கன்னி களையப்படும்
இரவு - இன்னும் ஒரு பகலுக்கும்
மற்றொரு பகலுக்கும்
கண்ணியாகவே இருந்து
இணைத்துகொண்டிருக்கிறது
******
இரவின் இலக்கணம்
இருள் என்றால் - என்
வாழ்வு ஒரு இரவு தான்
இலக்கண பிழை
இங்கே விதிவிலக்கு
******
யுகங்களாக காதலித்து
கொண்டிருக்கிறது இரவு
காத்து காத்து
பூத்து கொண்டிருகிறது
பூக்களை யாருக்காகவோ!!
******